றாம் சந்தோஷ் கவிதைகள்
றாம் சந்தோஷ்

by olaichuvadi


பிரிவாற்ற ஒரு குறட்டை போதும்
கடப்பாறையால் அந்த நாசித் துவாரங்களைத்
துளைக்கலாம் என்றிருக்கிறேன்
அந்த மூக்கு இருந்துவிட்டுப் போகட்டும்
சிதைபாடுகளைத் தவிர்க்க இதில் தேர்ந்த
தொழில்முறை சுகாறாவை அழைக்கலாம்
இங்கமர்ந்து இயங்கும் இவ் இரைச்சல்
என்னை எரிச்சலடையச் செய்கிறது
பஞ்சுகளைக் காதுகளில் பொதிந்து வைக்கிறேன்
அவன் நாசிகளில் புதைத்து அடங்கா ஊற்றாய்
வற்றாது ஒலிக்கும் அவ் இரைச்சல்
நாசியைத் தாண்டுகிறது
வெளியை ஊடறுக்கிறது
என் செவியைத் தீண்டுகிறது
என் உடலை இயக்குகிறது
உடலை இப்படியும் இயக்கலாம் என்கையில்
மலர்ந்த காற்றிற்குத் தீ என்று பெயர் வைக்கிறேன்.


வாதைகளைக் குறித்து எழுதுவது
அவ்வளவாக எனக்குப் பிடிப்பதில்லை
இருந்தும் அதன் தின்மையை இவ்வாறாக
ஓரளவு கடக்க முயல்கிறேன்
என்னை பைத்தியம் என சதா அவன் விளிக்க
இதுவும் ஒரு காரணம்
அவனைக் கொன்று விடவேண்டும்
இவன் மீதான கருணையோ கொஞ்சம் மீதமிருக்கிறது
நான் வாதை பூத்த அவன் தோற்பரப்பில்
என் இதழ்களால் வருடுகிறேன் என்கிறேன்
அவன் நான்கு ‘விரல் நகங்களே போதும் என்றான்.

பிற படைப்புகள்

Leave a Comment