வா.மு.கோமு கவிதைகள்

by olaichuvadi

ரண்டு நாளாய் இடறிச் சென்ற

வானம் பார்த்து ஏமாந்த

கடவுளெனும் முதலாளி

ஆழக்குழி வெட்டி பெரு விதையாய்

அதில் தன்னை

நட்டுவித்துக் கொண்டான்

ரோட்டிலிருந்து கோவை செல்லும்

பாசஞ்சர் ட்ரெயினிலிருந்து கட்டம் போட்ட

லுங்கியணிந்தவனொருவன் இறங்கி

ஊருக்குள் வந்து தன்னை ஊருக்குப் புதியவன்

என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்

பின்னாளில் அவன் ஊருக்குப் பழையவன்

ஆகியும் போனான்

ள் நடமாட்டமுள்ள சாலையில்

கற்பக விநாயகர் ஓவியத்தை

வார்ணச்சாக்கட்டிகளால் வரைந்து

முடித்தவன் சோர்ந்து போய்

தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

வழியாகச் சென்ற கடவுளின் கால்சட்டைப்

பையில் பைசாக்கள் எதுவுமில்லாததால்

பாவம் என்ற சொல்லை உதிர்த்துச் சென்றார்

டவுளின் கைப்பேசி எண்ணை எனக்கு

கொடுத்துப் போன கனகவள்ளி சொல்கையில்,

இவர் எப்போதும் எல்லைக்கு வெளியேயே

நடமாடிக் கொண்டிருப்பதாக ஒரு பெண்

சொல்லிக் கொண்டேயிருக்கிறாள் என்றாள்.

விதைப்பதற்காக கண்டங்கத்திரி விதைகள்

சிலவற்றை வைத்திருந்தான் அவன்

இதோ வருகிறேன் என்று இடித்துத் சொல்லியபடி

இருந்த வானம் இறுதியாய்

நாளை வாறேன் என்றோடிப் போனதுவே

விதைகள் அடங்கிய பையை மீண்டும்

பத்திரப்படுத்திவிட்டு டாஸ்மாக் நோக்கி

நடையிட்டான் விதைப்பாளன்.

பிற படைப்புகள்

Leave a Comment