1 வழி தப்பிய நாய்க்குட்டிக்குஎறும்புகள் புற்றுக்கு திரும்புவதுவேடிக்கையாயிருக்கிறதுவாலைக் கவ்வத் துடித்துதோற்கும் நீட்டல் நகபஞ்சு பாதங்களால்புற்றைக் கலைத்துப்பொழுது போக்குகிறதுகுரைப்பிழந்த வீடுகுறையுறக்கத்தில்சாலை நோக்கி ஊளையிடுகையில்ஒன்றோடொன்று சந்திக்கும்விளக்கற்ற முனையிலிருந்துதிரும்புதல் சாத்தியமிலாபாதை நீளத் தொடங்குகிறது 2 வெளி மொத்தமும்மேய்ச்சல் நிலமாய்பனிநீர் கனக்கும் புல்லைஅதக்கி கடவாயில் ஒடுக்கும்எருமையின் திமிலேறிஅமர்கிறது …