தொடர்புக்கு

by olaichuvadi

வணிக இதழ்களுக்கு உரித்தான பல அம்சங்களுடன் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓலைச்சுவடியின் முதல் இதழ் வெளியானது. ஓர் இதழைத் தொடங்கி நடத்துவதற்கு பொருளாதார வலு இருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பற்றுப் போனதால் ஓலைச்சுவடி மேற்கொண்டு வெளிவரவில்லை. வெறும் நினைவாக மட்டுமே இருந்த ஓலைச்சுவடி 2016ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. வணிக சமரசங்கள் ஏதுமின்றி தீவிர சிற்றிதழ்களின் பாதையை அடியொற்றி வந்தது. கலை இலக்கியம் என்பதோடு நில்லாமல் காலத்தின் தேவை கருதி சூழலியலையும் ஓலைச்சுவடி இணைத்துக் கொண்டது. கலை இலக்கியத்துக்கும் சூழலியலுக்கும் நீண்டதொரு இடைவெளி இருப்பதை உணர முடிகிறது. தற்போதைய உலகமயமாக்கலில் ‘சூழலியல்’ கருத்தாக்கங்களுக்கான தேவை இருக்கிறது. அவற்றை முதன்மைப்படுத்துவது இதழியலின் கடமை என்றே சொல்ல வேண்டும். அதன் படி கலை இலக்கிய சூழலிய இதழாக ஓலைச்சுவடி நான்கு இதழ்கள் அச்சில் வெளிவந்தன. அச்சிதழாக வெளிக் கொண்டு வருவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால் ஓலைச்சுவடி இணைய இதழாக மாற்றப்பட்டிருக்கிறது. பொருட்செலவு குறைவு என்பதோடு பரவலான வாசகப்பரப்பை சென்றடைவதற்கான சாத்தியம் இணையத்துக்கு உண்டு. அச்சில் வெளிவந்த 4 இதழ்களும் எண் வரிசையில் பதிவேற்றப்பட்டு, ஐந்தாவது இதழ் நேரடி இணைய இதழாக பதிவேற்றப்படுகிறது. இனி எண் வழி இணைய இதழாக ஓலைச்சுவடி உங்களை வந்தடையும்!

படைப்புகள் அனுப்ப: [email protected]