ஊத்தங்கரை தேவாலயத்தின் உள் சுவர்கள் அதிர அதிர மேரியின் குரல் கனத்துக்கொண்டே போனது. அவளது கேவல் உடைந்து அந்த தேவாலயமே அழுவது போல் குலுங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் மூவரைத் தவிர தேவாலயத்தில் யாருமில்லை. தாமஸ் தனது பிரெஞ்ச் தாடியின் நடுவிலிருந்த வெள்ளை முடியை…
கதை
-
-
புவனா மார்புகளின் மேல் கைவிரல்களைக் கோர்த்தபடி கிடந்தாள். கால்கள் அகன்று விரிந்திருந்தன. புடவையை முழங்காலுக்கு மேலே நன்றாக இழுத்து விட்டிருந்தாள். காற்று தாராளமாய் உள்நுழைந்து அந்தரங்க பிரதேசத்தைத் தடவிச் சென்றபோது இதமாயிருந்தது. அதனால் உண்டான சிலுசிலுப்பில் எரிச்சல் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது.…
-
வேட்டுகளின் அடுத்தடுத்த ஒலிகள் அந்த கருக்கல் நேரத்தை அதிர உசுப்பியது. மரங்களில், வயல்வெளிகளில் உறங்கிய பறவைகள் விலங்குகள் சட்டென்று கலைந்து சத்தமிடத் தொடங்கின. ’ம்மா’ என்ற பசுக்களின் கார்வையான அடிக்குரல் அழைப்புகளால், வயல்வெளிகளுக்கு நடுவில் இருந்த வீடுகளில் விளக்கொளிகள் ஒவ்வொன்றாக ஔிர்ந்தன.…
-
“சிஜ்ஜடம்” என்றார் சாமியார். நல்ல கறுப்பு நிறம். தாடியும் தலைமயிரும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து சிக்கலான சடைக்கொத்தாக இருந்தது. வாய்க்குள் பற்கள் மண்நிறத்தில் இருந்தன. அசையாமல் நிலைகுத்திய கண்கள். சுடலைப்பிள்ளை பக்கத்தில் இருந்த தரகு நாராயணனைப் பார்த்தார். “தாயளி, என்னல அவன் சொல்லுகான்?”…
-
தனக்கென புங்கை மரத்தடியில் இருந்த சில்வர் குண்டான், அமுத சுரபியாய் மாலை வேளையில் நிரம்பி தன் வயிற்றை நிறைக்க உதவிய பழைய நாட்களை நினைத்துக் கொண்டது டைகர். ஒருவார காலமாக குண்டானில் எந்தவித உணவுவகைகளும் விழாதது டைகருக்கு சோர்வையும் சோம்பலையும் தந்துவிட்டது.…
-
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நசீரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒரு மிகச்சிறிய மின்னஞ்சல். “அன்பின் கெவின், உம்மா சற்று முன் தன் சுவாசத்தை நிறுத்தி விட்டாள். விமானத்திற்காக காத்திருக்கிறேன். நாளை சந்திப்போம். இறைவனே மிகப்பெரியவன்.” நசீரை எப்படி எதிர்கொள்வது…
-
“வானத்தின் விளிம்பு நீ பாத்திருக்கியா. அந்த வட்டம் கண்டையா, அழகுடே. நிறைஞ்ச மஞ்சளை அள்ளி பூசின சிற்ப பொண்ணுக்குள்ள முகம்டே அது. விளிம்பு என்ன தூரம். கண்ணு காணா தூரம்தானே. வரைஞ்சு வச்ச கோடு கணக்கா சுத்துனாப்புல மலை, எத்தனை வாட்டி…
-
மேகேஷு ஒன்டில்லுதான் ராமுலு பற்றிய கதையை முதன்முதலில் என்னிடம் சொன்னான்.இந்த கல் பூமியில்தான் ராமுலு ரொம்ப காலம் வசித்துவந்தான். நிறைய நாய்களையும் பூனைகளையும் அவன் வளர்த்து வந்தான். அவன் இவ்வாறு சொல்லத் தொடங்கியதும், உடனே எனக்கு அந்த ஊருக்கு “குக்கல,…
-
[ 1 ] செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?” “என்னது?” என்றான் “நம்ம எருமைய பாக்குதது உண்டா?” “பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?” “அதில்ல” என்றாள் “போடி, போய் சோலிகளை பாரு..…
-
தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தது. கார் மேகங்கள் மங்களூரில் புலரியை ஒத்தி வைத்திருந்தது. தொடர்ந்து பொழிந்திருந்த மழையால் மரங்களும், செடி கொடிகளும் பசும் ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன. கவிந்திந்திருந்த சாம்பல் நிறக் காலை வெளிச்சத்திற்கு உயிரொளியூட்டுவது போல டோங்கர்கிரி வெங்கட்ரமணா கோவிலின் மெலிந்த…