உன்னை பின்னமர்த்திக்கொண்டுஅறியா ஊரின் தெருக்களில் சுற்றி மாளவில்லை.உனக்கு இடுகாடு ஆகாதென்றுதானே சோளத்தோட்டத்தை சுட்டினேன்.அங்கொரு வீடிருப்பது என் குற்றமா.பத்து மைல் தூரம் சுற்றிக் களைத்த பின்னும்முட்புதர்பின் கிணத்தடியை காட்டினேன்.“ச்சீ” என்றாய்.ஆனாலொன்று,இன்னுமொரு இடம்தான் மீதி இருக்கென் கண்ணகியே.அங்கும் தோதுபடாதுபோனால்இனி எப்போதுமே அது அமையாது …