நளிர்த்துளி போல் ஒர் இரவு ஏதோ இருளே சிறகசைத்து பறந்து செல்வது போல ஒரு காகம் புறப்படுகிறது.ஒட்டுமொத்த உலகையும்உலுக்கவேண்டுமென்று எதிர்பார்த்து நிற்கும் அசைவின்மை.கருநீல விசும்பில் விமானம் இட்டுச்சென்ற புகைநெடுஞ்சாலை.அச்சாலையின் இருமருங்கிலும் நட்சத்திர மரங்கள்.சற்றே உற்றுப்பார்க்கிறேன்,ஆ! அங்கே யாரோயொருவர் தன் மகளுடன் நடந்துகொண்டிருக்கிறார்தான்தான் …
வெ.நி.சூர்யா
-
-
காரணங்கள் வரைந்த ஓவியத்திலிருந்துவெளியே வந்த பெண் பறவையொன்றுவான் நோக்கி தனை போலிருந்தபறவைகளை கண்டது விடுதலை ஆபத்தானதெனஉள்ளுணர்வு கூற மறுபடியும் ஓவியத்திற்குள்ளேமறைந்து கொண்டது ஒரு பறவை யென் வீட்டையேசுற்றிவருவதற்கு இதைவிட சிறந்த காரணங்கள்இருக்க முடியுமா என்ன ரயிலுக்கு மறுபெயர் நிலவெளி ஒரு நிலவெளியிலிருந்து இன்னொரு நிலவெளிஅந்த இன்னொரு நிலவெளியிலிருந்துஇன்னொரு நிலவெளியென விரைகிறது ஒரு ரயில்.ஒவ்வொரு நிலவெளியும் அந்த ரயிலைஒவ்வொரு விதமாய் வரவேற்கிறது.நிலவெளி ஏதுமற்ற நிலத்தை அந்த ரயில்அடையும் போது அந்த ரயிலேஒரு நிலவெளியாய் மாறி விரைகிறதுஇன்னொரு நிலவெளியை நோக்கி தனி ஊசல் நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்அச்சத்தையும் பதற்றத்தையும் ஒரு சேர தருகின்றனதிடீரென எனக்காக யாராவது கண்ணீர் சிந்தினால்சாவின் பயம் வந்துவிடுகிறதுதிடீரென எனக்கு யார் மீதாவது நேசம் பீறிட்டால்பிரிவின் துயர் பற்றிய பயம் வந்துவிடுகிறதுஇப்போதெல்லாம் நேசிக்காமலோநேசிக்கப்படாமலோ இருந்துவிட்டால்தான் என்னவெனயோசித்து யோசித்து மாய்கிறேன்பொழுதும் போனபாடில்லை
-
முன்பு மாதவி நடந்து சென்ற அதிகாலை வீதிகள் காகமென பறக்க தயாராகின்றன ஆயுளின் புராதன எதிர்மறை எண்ணங்கள் மிதத்தலின் சுதந்திரத்துடன் சைக்கிள் ஓட்டுகின்றன பனித்துளிகளென காற்றில் மெய்யும் பிரமையும் கடந்த காலத்திய ஞாபகங்களை பரப்புகின்றன எருக்கஞ்செடிகளெல்லாம் சந்தோஷத்தில் அழுதழுது சொல்கின்றன …