முதியவர் கோஸ்கூஷ் பேராவலோடு உற்றுக்கேட்டார். பார்வை மங்கி நீண்டகாலம் ஆகிவிட்டாலும் கேட்கும் திறன் நுட்பமாகவே இருந்தது. மிகவும் மெல்லிய ஓசைகூட சுருங்கிய நெற்றியைத் துளைத்து அதன்பின்னே குடியிருந்த அவரின் ஒளிவீசும் கூர்மதியை அடைந்தது. ஆனாலும் இப்போதெல்லாம் சுற்றியிருக்கும் உலகத்தின் நடவடிக்கைகளில் …