பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ? …
கார்த்திக் நேத்தா
-
-
மனவேலை தணிந்தது உரித்த பிறகேஒன்றுமில்லை என்று புரிகிறது.நினைவே இன்பம் என்கிறார்கள்எனில்வாழ்ந்துபார்க்காமல்நினைவைப்பெறுவது எப்படி?அனுபவம் படுத்துவிட்டதுஆரவாரம் இறந்துவிட்டதுஅலையெனத் திமிறிஉணர்வுகள் எழுவதில்லை.மனவேலை தணிந்ததும்மகத்துவம் நடக்குமென்றார்கள்எனக்கு நானே சதாசிரித்துக்கொண்டிருப்பதுதான்அந்த மகத்துவமா? கல்நிழல் மோனநீட்சியில்சொல் அறும்.ஒலி இறந்துதொனி பிறக்கும்.உள்ளுறை நாதம்வெளி நிறையும்.ஒழுகுநீர் ஆரலைக்கவ்விப் பறக்கும் கழுகுமோனம் விரிந்தஅகலிரு …
-
அக் கனி பகுபடாத ஒருமையின் கனி கணத்தில் முழுமையாகக் கனிந்திருக்கிறது கணத்துக்குச் சற்றே சற்று அருகில் தான் நிற்கிறேன் கைக்கொள்ள முடியவில்லை அருகிலிருப்பதனாலேயே அகப்பட்டு விடுமா என்ன அக் கனி . சுவாங்ட்சுவின் வண்ணத்துப் பூச்சு இப்போது அவன்கண்ணீரிலிருந்து மூலிகைபெறலாம்இப்போது …
-
ஒளி வருகை நிச்சலனமான நீர்நிலையெனமிதந்தபடி இருக்கிறதுஅறையின் இருள்விட்டெறிந்த நாயின் குரைப்புநீர்நிலையினைச் சலனப்படுத்துகிறது.கதவைத் திறந்ததும் நீர்நிலை காணாமல்போய் விடுகிறதுவிட்டெறிந்த நாயின் குரைப்புஅறையின் மூலையில்அங்குமிங்கும் அலைந்துவிட்டுஅமர்ந்து கொள்கிறதுவெளிச்சம் ஆசுவாசமாகஅறையை நகர்த்திக் கொண்டிருக்கிறது. வெளிச்சம் வந்துநீர்நிலை காணாமல் போனதா? அங்கேயே இருக்கிறதா?ஒருமுறை மட்டும்தானே நிகழும்ஒரு …