பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ? …