பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ? …
Tag:
poems
-
-
1 குடைசலிலிருந்து வானத்தின்பற்கள் உதிர்கின்றன.இதற்கு முன்னர்மேலெழுப்பப்பட்டவர்களின்உடற்துண்டுகளைப் போலகுடைசல் மழைகுழிச்சதையாய்ஒரேயடியாய் பொழியும் போதும்வானச்சீப்பிலிருந்து பற்கள் கரையும்.ஒரு குருவித் தலைக்கனத்தில்மேகங்கள் மூடிய எல்லா நாட்களும்சிதைத்துக் கொன்றுமேலெழுப்பபட்டவர்களுக்குதுன்பமாயிருந்தன.ஒட்டுமொத்தமாகஅவர்கள் நேசத்தின்குடைசலில் இருந்தார்கள்.ஒரு மின்னலின் மேல் பகுதியில்அவர்களின் நேசத்தின்பெரும்பகுதியைஒளியேற்றி இருந்தார்கள்.அதற்கு பிறகான மழையில்உடற்பகுதியை அவர்களாககுடைசலில் கரைத்த போதும்ஒளி நிர்மூலமாகவே …