ஆச்சாண்டி
இவான் கார்த்திக்

by olaichuvadi

 

“லேய் ஆச்சாண்டி , இங்க வால” என்றான் கரிச்ச

சாப்பாட்டு வட்டையை கழிவிக்கொண்டிருந்தவன் பாதியிலேயே நிப்பாட்டிவிட்டு. வேகமாக கோழி நடையில் அவனருகில் வந்தான்.

“எனக்க பேரு சுப்புரமணியாக்கும். சும்மா வட்டப்பேர சொல்லி கூப்புடாதண்ணு பலட்ரிப்பு உனக்கிட்ட சொல்லிட்டேன்”

“பொம்பளைங்க அம்மணங்குண்டியா இருக்க படமிருக்கு பாக்கியா” என்று கையிலிருந்த படமொன்றை காட்டினான். அதில் பெண்ணொருத்தி கால்கள் விரிய தலையில் கைகளை மடக்கி வைத்து நிர்வாணமாக உடலில் நீர்த்துளிகளுடன் நிற்க அருகில் ஒரு ஆண் விறைத்த குறியை கையில் பிடித்து நின்றிருந்தான். அவளின் கண்கள் அதிலேயே நிலைகுத்தியிருந்தன.

ஒரு கணம் அதனைப்பார்த்த ஆச்சாண்டி வியர்க்க “அதொண்ணும் வேண்டாம். நான் பேறேன்” என்று கூறி கிளம்பியவனை திண்டில் அமர்ந்திருந்த கரிச்ச தன் கால்களுக்கிடையில் பிடித்திறுக்கி நிப்பாட்டினான். ஆச்சாண்டி திமிறிக்கொண்டேயிருந்தான்

“செரிடே பயராத சும்மா பயங்காட்டுனேன் , வேலைக்கு வாரேண்ணு சொன்னியே நாளைக்கு ஒரு கல்யாணத்துக்கு வெளக்கு புடிக்க போணும் வாரியா ?” கரிச்ச அவனை விடுவித்திருந்தான்.

“செரில வாரேன் எவ்வளொ தருவானுவ ?” என்றான் கழுத்திறகுகள் விடைத்த கோழியென.

“கணக்கொண்ணும் இப்பொ சொல்லுகதுக்கில்ல , தோரயமா ஒரு நூறு நூத்திபத்து தருவானுங்க , மத்தியானம் நல்ல நெய் சோறும் கோழி சால்னாவும் உண்டு. நல்லா சப்பிட்டு வரலாம்”

“அப்பொ செரி நாளைக்கு எங்க வரணும் எத்தன மணிக்கு வரணும்”

“காலைய ஒரு ஆறு மணிக்கா , பறக்க விலக்குக்கிட்ட வந்துறு , இடலாக்குடிலயாக்கும் கல்யாணம். காலைல நானும் வந்து ஆள காமிச்சி தாரேன். எனக்கும் கைல ஒரு நாப்பது ரூவா தரணும்” என்று உறுதியாக சொன்னான் கரிச்ச

“லேய் தரதுல பாதிய நீ புடிங்கிபோட்டா எனக்கென்னல வரும்”

“லேய் ஆள காமிச்சி தரது நானாக்கும் , தரது மாரினா போ, இல்லன்னா இந்தா இவன் போவான்” என்று உருண்டையை காட்டிச்சொன்னான்.

உருண்டை “லேய் விளக்கு புடிக்கது லேசு பட்ட காரியமில்ல , அவன் எங்க காட்ட சொல்லுகானோ அங்க காட்டணும் , தவறி போய் வேற எங்கயாவது காட்டுணா சள்ள தனமா ஆகிப்போடும். பொறவு உள்ள காசையும் தர மாட்டானுங்க” என்று சிரித்தான்.

“அதெல்லா செஞ்சிருவம்ல , நாளைக்கு ஆள காட்டு. அம்ம தேடுவா ஸ்கூல் பெல்லடிச்சி அர மணிக்கூராச்சி. காலைல வந்துருல ஏமாத்திப்பொடாத” என்று திரும்பி நடந்தான்

“செரிடே மக்கா, காலைல பாப்போம்” என்றான் கரிச்ச

“உண்மையிலேயே இவனுக்கு வெளக்கு பிடிக்கதுண்ணா என்னனே தெரியாதா, இல்ல நம்ம கிட்ட நடிக்கானா” என்றான் உருண்டை

அவன் தோளில் கைபோட்டு “லேய் கேமெரா மேன் கூட லைட்டு பிடிக்க போறதுண்ணுதான் நெனச்சிட்டுருக்கான். நம்ம அளவுக்கு வெவரம் பத்தாதாக்கும்” என்றான் கரிச்ச

“அண்ணைக்கு ஒரு சிடி கொடுத்தேலா, அது ஓடவே மாட்டங்கு. பொறவு சும்மா நானே நம்ம சுபா டீச்சர நெனச்சி அடிச்சி விட்டுட்டேன். நல்ல சர்பெக்ஸல் வாசன” என்று உருண்டை குனிந்து சிரித்தான்

பற்கள் மட்டும் வெண்மையாக தெரிய “சேய்….கொஞ்சம் பொறுக்க மாட்ட நீயி” என்று கூறி கிழிந்த வாய் முழுவதும் திறக்க சிரித்தான்

“லேய் சிடி பிளேயர்லயே கெடக்குல. அப்பா போட்டு பாத்து ஓடிச்சுன்னா எனக்க சங்க கிளிச்சுறுவான்” என்று கூறி ஓடினான் உருண்டை.

“உங்கப்பா இதுமாரி பாத்துருக்கவே மாட்டாரு மக்கா. சந்தோசமா பாக்கட்டும்” என்று மீண்டும் சிரித்தான் கரிச்ச.

“லேய் ஆச்சாண்டி , ஊய்” என்று கத்தினான் கரிச்ச.

ஆச்சாண்டி திரும்பிப்பார்க்காமல் நடந்தான்.

காலில் லூனார்ஸ் ரப்பர் செருப்பு அதில் பாதி கால் தரையைத்தடவும் சிறிய ஓட்டை. ஒட்ட வெட்டப்பட முள் போன்ற தலை மயிர். கால்களைவிட இருமடங்கு அகலமான பேண்ட். வேகமாக காற்றடித்தால் முதுகின் பின் பலூன் தோன்றுமளவுக்கு பெரிய காமராஜர் சட்டை. தடித்த மூக்குக்கண்ணாடி , அதனை கழற்றி அவன் பள்ளியில் எவரும் பார்த்ததில்லை. அதன் வழியே அவன் கண்கள் மீனின் கண்களைப்போல இமைகளே இல்லாதவைப் போலிருக்கும். பரப்பி பரப்பி கோழி போன்று நடப்பான். மற்ற மாணவர்கள் தோல் பைகளை எடுத்து வரும் பொழுது இவன் மட்டும் பிளாஸ்டிக் கவரில் புத்தகங்களை வைத்து எடுத்து வருவான். தேவைக்காக மட்டுமே மற்ற மாணவர்களிடம் அதும் தலை குனிந்தே பேசுபவன். எப்பொழுதும் ஒரு அவசரம் கைகால்களில் பதற்றம்.. சப்பையான மூக்கு, உருண்டை முகம். தெரியாத மருத்துவர்கள் பார்த்தால் மூளை வளர்ச்சியில்லாத குழந்தை என்று கூற வாய்ப்பிருக்கிறது.

காலை சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே பறக்கை விலக்கிலிருக்கும் பெரிய ஆலமரத்தின் கீழ் நின்றிருந்தான். கொத்த வேலைக்கு செல்பவர்கள் வேட்டி சட்டை, டீ சர்ட் பேண்ட் என்று சுத்தமாக உடையணிந்திருந்தனர்.

“இது ஆராக்கும் நம்ம மணிவண்ணன் மகனா , நேரம் வெளுக்க இங்க என்ன சோலி உனக்கு. கொத்த வேலைக்கு வாரியா, எந்த கண்ட்ராக்டரு” என்றான் சுடலையாண்டி

“வேற வேலைக்கு போறேன்” என்றான் ஆச்சாண்டி

“அது இப்பொ படிச்ச பிள்ளேள்லாம் கொத்த வேலைக்கு இறங்கியாச்சுல்லா அதான் கேட்டேன்” என்றவர் ஒரு பீடியை எடுத்து பற்றவைத்தார். குந்தி அமர்ந்திருந்தவனின் குறி  சிவப்பு டௌசரைத்தாண்டி தரையைத் தொட்டுக்கொண்டிருந்ததை ஆச்சாண்டி பார்த்துக்கொண்டிருந்தான்,

“பிள்ளைக்கு இருக்கதுதான எனக்கும் இருக்கு, எதுக்கு பசுவ காள மாடு பாக்கது கணக்கா பாக்குது” என்று எழுந்து கொண்டார். அவர் பார்வையை தவிர்த்தான் ஆச்சாண்டி.

வரிசையாக வந்த டெம்போக்களில் கூட்டம் ஏறிச்சென்றது. சுடலையாண்டி வண்டியில் ஏறிய பின் “பிள்ளே நாளைக்கு வரணும் இன்னும் நல்லா காட்டுதேன்” என்று வேட்டியை தூக்கிக்காட்டி சிரித்தான். வண்டியில் இருந்த மற்றவர்களும் சிரித்தனர். தன் குறியை அவர் குறியுடன் சேர்த்து யோசித்துப்பார்த்தான்.

அந்த எண்ணத்தை தவிர்க்க ரோட்டின் முனையில் வரும் வாகனம் ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருக்க நிலைகொள்ளாமல் அமைதியிழந்தவனாய் கால்களை தரையில் தேய்த்துக்கொண்டிருந்தான். கரிச்ச மோட்டார் சைக்கிளில் இன்னொருவனுடன் வந்து அவனருகில் இறங்கினான். கையிலிருந்த கருத்த பையை ஆச்சாண்டியிடம் கொடுத்து. “லேய் இவருக்கூட போ , என்ன சொல்லுகாரோ செய்யி. கெளம்பும் போது ரூவா தருவாறு நாளைக்கு ஸ்கூலுக்கு எனக்க பங்க எடுத்துட்டு வந்துரு” என்றான். வண்டியில் இருந்தவனிடம் திரும்பி ” அப்போ செரி கிரீஷண்ணே நா வாரேன் , பய புதுசு பாத்துக்கொடுங்க” என்றவாறு கைகாட்டிவிட்டு சென்றான்.

“ஏறிக்கோ” என்றான் கிரீஷ். இதுதான் முதல் தடவை மோட்டார் சைக்கிளில் ஆச்சாண்டி ஏறுகிறான். எப்படி அமர்வதென்று தெரியாமல் திகைத்து முளித்திருந்தவனைப்பார்த்து “கல்யாணம் முடிஞ்ச பொறவு போவோமா” என்றான். எப்படியோ ஏறி அமர்ந்தவன் வண்டியின் முதல் முடுக்கத்தில் கால்கள் தூக்க கிரீஷின் கைகளில் தட்டிவிட்டான். வண்டி குலுங்க ரோட்டில் சரிந்திருக்கும். வண்டியை நிலைப்படுத்திக்கொண்டு கிரீஷ் “கொஞ்சம் அமந்து இருக்கியாடே. இது வண்டியாக்கும் கொடைக்கு போடுக ஸ்டேஜ் கிடையாது. இருந்தா அப்புடியே இருக்கணும் கெடந்து டான்ஸ் ஆடப்பிடாது” என்றான். அதன்பிறகு நடுமுதுகில் ஆணியடித்தாற் போல அப்படியே இருந்தான் ஆச்சாண்டி.

மண்டபத்தில் முன்பக்கம் பழைய கட்டிடம். வாசல் ஒரே நேரத்தில் இருவன் மட்டுமே உள்நுழையும் வண்ணம் இருந்தது. வெளியிருந்து பார்க்கும் பொழுது அதுவொரு பழைய மரக்கடை போல கதவுகளும் வாசற்படிகளும் தூசியுடனிருந்தது. அதனை கடந்து இருவரும் உள்ளே சென்றனர்.  குஞ்சிருக்கும் ஓட்டின் உயிரற்ற தன்மையைப்போல மண்டபத்தினுள் நிற்க முடியாத அளவிற்கு கூட்டம். சரியான நேரத்தில் வரவில்லையென்ற எரிச்சலுடன் கிரீஷ் ஆச்சாண்டியிடம் பொருட்களை எடுத்து வரச்சென்னான்.

“எங்கல்லாம் பிளக் பாய்ண்டு இருக்குண்ணு போய் பாத்துட்டுவா”  என்றான் கிரீஷ். புரிந்து கொள்ள முடியாமல் முளித்த ஆச்சாண்டியப்பார்த்து “சவத்த எனக்கிட்ட கட்டிடானுங்க. நல்ல பயக்களெல்லாம் எடுத்துக்கிட்டு இத மாரி உள்ளத எனக்கிட்ட அவிச்சி தள்ளிருகானுங்க. பொறவு பேசிக்கிடுதேன்” என்று முனுமுனுத்தான்.

“கரண்ட் ஓட்ட எங்கல்லாம் இருக்குண்ணு பாத்துட்டு வா” என்றான். பதில் எதுவும் பேசாமல் பார்த்துவிட்டு வந்தான் ஆச்சாண்டி.

“கவனமா கேட்டுக்க திரும்ப திரும்ப சொல்ல மாட்டேன். உனக்க வேல இந்த லைட்ட அணையாம நா சொல்லுக இடத்த பாத்து புடிக்கணும் கைய இறக்கவேபிடாது. கரண்ட் பாக்ஸ்ல இருந்து ஒயர் எடுத்து எங்கல்லாம் சொல்லுகனோ அங்க வர கொண்டு போய் போடணும். ஒயர எங்கயும் மாட்டப்பிடாது. யாரும் சவுட்டி கழத்தி விட்ர கூடாது. அங்கங்க ஒட்டு போட்டுருக்கும் அது கழந்துராம பாத்துக்கிடணும். சின்ன பிள்ளைங்க பக்கத்துல ஒயர போடக்கூடாது.  முக்கியமா ஒயரு நீ இழுத்தா வரணும் , நா ஒரு இடத்துல நிக்க மாட்டேன் எனக்கூடவே வரணும். கூட்டத்துல நிக்கும்போ பேச மாட்டேன் சைக காணிச்சா புரிஞ்சி வரணும். மனசுலாச்சா” என்றான். ஆச்சாண்டி தலையாட்டினான். கிரீஷ் “இதுல மொத்தம் மூணு செட் ஒயரிருக்கு. ஒவ்வொண்ணையும் கரெக்ட்டா மாட்டி கொண்டு வந்து போடு. ஒண்ணு மணமேடைக்கு நேரா கீழ. மத்த ரெண்டுல ஒண்ணு இடது பக்கம் இண்ணோணு வலது பக்கம். அப்பொறம் என்னொரு விஷயம், ஒயரு நல்ல வட்ட வட்டமா சுத்தி வச்சிருக்கும். எடுக்கும் போது எப்புடி இருந்துச்சோ அப்புடியே திரும்ப வைக்கணும். நல்ல மலப்பாம்பு சுருண்டு கெடந்த மாரியிருக்கும். நீ ஒருட்ரிப் சுருட்டி வச்சிட்டா மறுக்க எடுக்கும் போது பாம்பு தலைய புடிச்சிழுத்தா வாலுவர நல்லா வழுக்கிட்டு வரணும். நா டீ குடிச்சிட்டு வந்துர்றேன். வாய பாக்காம சொன்னத செய்” என்று வெளியே சென்றான்.

ஆச்சாண்டிக்கு தலை சுற்றியது. கிரீஷ் சொன்னதை முழுதாக புரிந்து கொண்டதாக அவனுக்கு தோன்றவில்லை. ஒவ்வொரு ஒயர் கற்றைகயாக எடுத்து நிதானமாக செய்தான். கிரீஷ் வந்து பார்க்கும் பொழுது எல்லா வேலைகளும் ஒழுங்கான முறையில் செய்யப்பட்டிருந்தது திருப்தியைக்கொடுத்தது. கிரீஷ் மெதுவாக கேமெராவின் பாகங்களை பொருத்திக்கொண்டிருந்தபோது மண்டபத்தினுள் திடீரென்று மக்கள் அங்குமிங்கும் அலைவதும் பின் கட்டளையிடுவதுமாய் இருந்தனர். மணமகள் வருவதை கவனித்த கிரீஷ் “லேய் கைல அந்த லைட்ட எடுத்துக்க எனக்க பின்னாலயேவா நா கேமராவ திருப்புக பக்கம் நீ லைட்ட காட்டணும். நெழலு விழக்கூடாது பாத்துக்க” என்றபடி கேமெராவை எடுத்துக்கொண்டு நடந்தான்.

“ஆயிஷா வந்தாச்சி” என்ற பெண் குரல் எங்கிருந்தோ கேட்டது.

ஆச்சாண்டி லைட்டுடன் கிரீஷின் முன் சென்று நின்றான். தேர் ஊர்ந்து வருவது போல ஆயிஷா வந்தாள். பச்சை வண்ண பட்டணிந்து நகைகள் சுமந்து தேரென நிற்க சுற்றியிருந்த பெண்கள் அவளை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

ஆச்சாண்டிக்கு மூச்சு முட்டியது, வெண்ணிற மென் தோலில் சிறு சிறு புள்ளிகளுடன் கூடிய கீழ் கழுத்தே அவனுக்கு முதலில் தெரிந்தது. அதில் வியர்வைத் துளிகள் தேங்கி வழிய காத்திருந்தன. அந்த நியான் லைட்டு வெளிச்சத்தில் அவை மினுங்கின. நெஞ்சில் தொங்கிய நகைகளுக்கிடையில் கனத்து திரண்ட முலைகள். அதன் காம்புகளைகூட அவனால் பார்க்க முடிந்தது. முலைகளுக்கிடையில் வியர்த்திருந்தது. உமிழ் நீர் அதிகமாக சுரக்க அதனை விழுங்கிக் கொண்டேயிருந்தான். உடம்பே இதயமாய் அவனுக்கு துடித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துடிப்பிற்கும் அவன் அதிர்ந்து ஒரு அடி முன்னால் அவளை நோக்கி செல்வது போலிருந்தது. அவளின் தொடையிடுக்கில் அரும்பியிள்ள வியர்வையைக்கூட அவன் நுகர முடிந்தது.  பின் மண்டையில் விழுந்த அடியால் நிலை குலைந்தவனாக வாயை மூடி கனவிலிருந்து விழித்தவன் போல கிரீஷைப்பார்த்தான்.

கிரீஷ் “வாயப்பாக்காம மேடைக்கு மேல வால மாந்தையா” என்றான். பதில் சொல்லாமல் அவன் பின்னால் ஆச்சாண்டி சென்றான். கனவிலிருந்து விழித்த பின்னும் மனம் அதிலிருந்து வெளியே வர விருப்பமில்லாமல் அதன் உச்சவெளியில் உலவ நின்றிருந்தான் ஆச்சாண்டி. கைகால்கள் உதறிக்கொண்டேயிருந்தன. கிரீஷ் “பின்னால நெறைய நெழலடிக்கி அங்க லைட்ட அடி , நிப்பாட்டி வச்சிருக்க லைட்ட சீலிங்க பாத்தமாரி வச்சுவிடு” என்றான். ஆயிஷாவிற்கு பின்னால் போய் உட்கார்ந்துகொண்டான். அவள் கைகளை தூக்கி தலையிலிருக்கும் படுதாவின் சிக்கை எடுக்கும் பொழுது அக்குளின் வியர்வையைகண்டான். கை மார்புடன் இணையும் இடத்திலிருக்கும் வழு வழுப்பான தோல்பிதுக்கம், மீண்டும் அதே கனவுவெளி. அவளின் கழுத்தில் ஒவ்வொரு பெண்களாக வந்து மஞ்சளும் சந்தனமும் கலந்த சாந்தை தடவிச்சென்றனர். அங்கு வந்த ஒவ்வொரு பெண்களும் அவன் முன் வந்து அவனை கூர்ந்து கவனித்து பின் ஆயிஷாவின் கழுத்தில் சாந்த பூசிவிட்டு சென்றனர். மேடையிலிருந்த எல்லா பெண்களும் அவனை எங்கிருந்தோ ஓரகண்ணால் பார்த்து பின் பக்கத்தில் இருப்பவர்களிடம் இவனை காட்டி எதாவது சொலதையும் ஆச்சாண்டி கவனித்தான். அவர்களின் கண்களில் வெட்கமும் நமட்டுச்சிரிப்பும் கலந்திருந்தது. தலையைத்தாழ்த்தி வாய்பொத்தி சிரித்தனர்.

முன்னாலிருந்த கிரீஷ் “லேய் லைட்டா நேரா கேமெராக்குள்ள அடிக்காதல மயிராண்டி” என்று மேடையிலேயே கத்தினான். சுதாரித்துக்கொண்ட ஆச்சாண்டி எழுந்து நிற்கவும் காலில் மாட்டிக்கொண்ட ஒயர் மேடையின் மேலிருந்த அலங்காரத்தூணைச்சாய்த்து அவன் மேலேயே போட்டது. ஆத்திரமடைந்த கிரீஷ் அவனருகே வந்து “அறிவு மயிருரிக்கால, என்ன சொன்ன என்ன செஞ்சிட்டுருக்க. இங்க என்ன செரக்கதுக்க வந்த” அவன் காதருகே வந்து “பொம்பளைகள பாத்தது போதும் எந்திச்சி லைட்ட புடில” எழுந்து தன்னை சரி செய்து கொண்டான். பின் தொழுதனர் ஓதினர் கையெழுத்திட்டனர். அதுவரை கிரீஷை கவனித்துக்கொண்டிருந்த போதிலும் அவன் எண்ணம் முழுவதும் ஆயிஷாவின் உடலசைவுகளிலும் வியர்வை மணத்திலும் அங்கிருந்த பெண்களின் வெட்கச்சிரிப்பிலும் சிரத்தையுடனிருந்தது.

மாப்பிள்ளையும் ஆயிஷாவும் மேடையிலிருந்து இறங்கி சாப்பிட செல்லும்போது கூட்டத்திலிருந்த ஒரு பெண் கிரீஷின் அருகே வந்து அவன் காதுகளில் எதோ சொல்லி ஆச்சாண்டியைகாட்டி சிரித்தாள் அவனும் தலையை ஆட்டிவிட்டு சிரித்தான். அந்த சூழ்நிலை ஆச்சாண்டியையும் தொற்றிக்கொள்ள அவனும் சிரித்தான். கிரீஷ் அவனுருகில் வந்து “மக்காலே சுத்தி சுத்தி வந்து எல்லாருக்கும் ஃப்ரீ சோ காட்டிருக்கியேடே. கல்யாணத்துக்கு வந்த எல்லா பிள்ளைகளும் உனக்க மணிய பாத்துருக்கும் போலயே. ஜிப்ப போடு. உன்ன பாத்தா எனக்கே பொறாமையாயிருக்கப்பா” என்று பொய்கோபப்பட்டான். ஜிப்பை போட்டுக்கொண்டு தலையை சொரிந்துகொண்டே பல்லைக்காட்டிச்சிரித்தான்.

“எல்லாரும் என்னையவா பாத்தாங்க” என்று மீண்டும் சிரித்தான்.

“செரியான ராசிக்காரம்ல நீ” என்றான் கிரீஷ்.

அன்றிரவு ஆச்சாண்டி ஒரு கனவுகண்டான், அவனைச்சுற்றி எல்லா பெண்களும் நிர்வாணமாக நிறபதைப்போல உணர்ந்தான். எல்லாரும் ஒரே நேரத்தில் கைகளை வளைத்து தூக்கி தலையில் மடித்து வைத்துக்கொண்டு ஒரு காலை மட்டும் வளைத்து நிற்கின்றனர். அந்த அறை முழுக்க வியர்வை நெடி. எல்லா உடல்களும் ஒரேபோலிருந்தன. உடைந்த ஆடியின் ஓராயிரம் பிம்பம் போல அவை அவனைச்சுற்றி நெளிந்திருந்தன. எல்லா உடல்களிலும் விதவிதமாக அவன் காலையில் பார்த்த பெண்களின் தலைகளாகயிருந்தது. இருப்பதில் பெரியதாய் ஆயிஷாவின் தலையுடைய உடல். அந்த உடல் கூட்டத்தின் நடுவே அவன் அம்மணமாய் விறைத்த குறியுடன் நின்றிருந்தான். தூரத்தில் ஒரேயொரு வித்தியாசமான உடல் மட்டும் தனித்து தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. சலனமற்றிருந்த அதன் மடியில் ஒடிச்சென்று படுத்துக்கொண்டான். அதன் முலைகளில் வாய்வைத்து சப்ப ஆரம்பித்தான்.

விழித்து பார்க்கையில் தொடையில் அவன் குறியுடன் ஈரமாக இருந்தது. பயத்துடன் எழுந்து அதனை துடைக்க பின்னால் இருக்கும் முடுக்கிற்கு வந்தான். கொடியிலிருந்த ஓர் அழுக்குத்துணியில் துடைத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தான்.

“குஞ்சு மணிய நல்லா கழுவி தொடச்சியா மக்கா. நாளைலிருந்து ஜட்டி போட்டுட்டு ஸ்கூலுக்கு போவணும்” என்றாள் அம்மா படுத்துக்கொண்டே.

பிற படைப்புகள்

Leave a Comment