1 குடைசலிலிருந்து வானத்தின்பற்கள் உதிர்கின்றன.இதற்கு முன்னர்மேலெழுப்பப்பட்டவர்களின்உடற்துண்டுகளைப் போலகுடைசல் மழைகுழிச்சதையாய்ஒரேயடியாய் பொழியும் போதும்வானச்சீப்பிலிருந்து பற்கள் கரையும்.ஒரு குருவித் தலைக்கனத்தில்மேகங்கள் மூடிய எல்லா நாட்களும்சிதைத்துக் கொன்றுமேலெழுப்பபட்டவர்களுக்குதுன்பமாயிருந்தன.ஒட்டுமொத்தமாகஅவர்கள் நேசத்தின்குடைசலில் இருந்தார்கள்.ஒரு மின்னலின் மேல் பகுதியில்அவர்களின் நேசத்தின்பெரும்பகுதியைஒளியேற்றி இருந்தார்கள்.அதற்கு பிறகான மழையில்உடற்பகுதியை அவர்களாககுடைசலில் கரைத்த போதும்ஒளி நிர்மூலமாகவே…
கவிதை
-
-
மகாநதியில் மிதக்கும் தோணி அடைந்துவிட்டான் அவன்மானுடம் அடைய வேண்டியஅந்தப் பொன்னுலகை!துடுப்பு வலித்து துடுப்பு வலித்துநதி கலக்குவதை நிறுத்திய வேளை,அசைந்துகொண்டிருந்த தோணிஅசையாது நின்ற வேளை,மின்னற்பொழுதே தூரமாய்க்காலமும் இடமும் ஒழிந்த வேளை,அடைந்துவிட்டான் அவன்! மகாநதியில் மிதக்கும் தோணிஉயிர்பிழைக்கும் வேகத்தோடேகரையிலிருந்த மக்கள்பாய்ந்து பாய்ந்து நீந்திக்கை…
-
இன்னொருமுறை சந்திக்க வரும்போது இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒரு துண்டு பூமியைக் கொண்டு வருவேன்.திரும்பும்போதுதுகள்களின் பெருமூச்சை எடுத்துச் செல்வேன். இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகக்கையளவு சமுத்திரத்தை முகந்து வருவேன்.விடைபெறும்போதுஅலைகளின் நடனத்தைக் கொண்டு போவேன் இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒருபிடிக் காற்றைப் பிடித்து வருவேன்படியிறங்கும்போதுஉயிரின் துடிப்புகளைக் கணக்கிட்டு…
-
1 உனது எல்லாப்பிரயாணத்தின் போதும்பிங்களப் பன்றி இடப்பக்கமாககடக்கிற சுப நிகழ்ச்சி நிகழபீடைப்பற்றும்இத்தேசத்திற்குப்வந்து சேர்கிறாய்உனது அதிர்ஷ்டம்குளிர்ந்த குளங்களும்எண்ணற்ற பறவைகளும்உள்ள சிரேட்டத்தைகாணும் பாக்கியம் வாய்க்கிறதுநீ இங்கு தீடீரெனராஜனாகவே மாறுகிறாய்சர்வமும்சித்திக்கிறது உனக்கு அதனால்சகலத்தையும்மாற்றத்தொடங்குகிறாய் நீ தொடங்கியிருக்கும்அவச்சின்னங்களைஇதற்கு முன்புபெருந்துக்கத்திலும்எனது மூதாதையர்நினைவூட்டியதில்லை தற்போது எனது நிலம்மிகுந்த கோடையில்காய்ந்து கிடக்கிறதுகாடைகளும்…
-
சிறு கூடத்துச் சுவரையொட்டி தாளைத் தரையில் வைத்து பிள்ளைகள் வட்டமாய் அமர்ந்திருக்கின்றனர். மையத்திலே குவிக்கப்பட்டன வண்ணக்குச்சிகள். வரைதல் தொடங்கிற்று. ஒரே சமயத்தில் பலர் வட்டம் விட்டோடி வந்து வண்ணங்களைத் தேர்கின்றனர் மையத்திலிருந்து. எங்கிருந்தோ வரும் பறவைகள் ஒரு மரத்தை ஒரே நேரத்தில்…
-
1 சுரங்க ரயில் நிலைய இயந்திரத்தில் நிரப்பிக்கொண்ட காஃபி கோப்பையோடு, இருக்கைக்குத் திரும்புகையில் அதிர்ஷ்டம்போல் முன்கேசமலைய, இடுங்கிய பழுப்புக் கண்களுடன் முறுவலித்தபடி அவள் எதிர்ப்பட்டாள். அங்கே ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைநோக்கி ஒளித்துண்டொன்று ஊர்ந்து கடந்தது. நீலவண்ண உடையில் எடுப்பான,…
-
சிட்டு ஏரித் தண்ணீரைகிண்ணத்தில் மொண்டுவைத்தேன்சிட்டுக்குருவி தாகத்துக்கு.பெரிய கிண்ணத்தில்குடித்துக்கொள்கிறேன் எனஏரிக்குப் பறந்தது சிட்டு.இனி அதுஎனை எப்படி நம்பவைக்கும்தானொருசிட்டுக்குருவி என்று. மலர் நீட்டம் யதார்த்தத்தைவிடசற்று நீட்டமாக வளர்ந்துவிட்டநெருஞ்சி மலர் நம்புகிறதுபூமியைத் தூக்கிக்கொண்டுதான் பறப்பதாக. சல்லிவேர்களும் நம்புகின்றனஅட்ச – தீர்க்க ரேகைகளுக்குதாங்கள் உயிரூட்டுவதாக. சும்மா இருந்த…
-
சிவப்பு எப்போதைக்கும் போல்தான்அந்நாளும் கொடுக்கப்பட்டதுஎனது வெள்ளை கையுறை திடீரென சிவந்ததுபதறினேன் அதை மேலதிகாரி கவனிக்கவில்லைஆனாலும் பயந்தேன் கால்சாராய்க்குள்கைநுழைத்து எடுக்கும் போதுசுட்டுவிரல் உள்ளேயே விழுந்துவிட்டதுசக பணியாளன் புன்முறுவலோடு அதைப் பார்த்தான்திரும்பத் திரும்ப கையை நுழைத்துவிரலை எடுக்க முயன்றேன்இப்போது எல்லோரும் பார்த்து விட்டார்கள்சிவந்த கையுறை…
-
எங்களின் பிரதிதான் காம்பஸ் அப்பனும் நானும்கட்டைக்கால் ஆட்டக்கலைஞர்கள்.செங்குத்து மதில்களில் நடப்பதால்அப்பனின் கட்டைக்கால்பல்லியின் வாலைத் துண்டித்தது.பிசாசாய் வளர்ந்த மருதமரமாகதரையில் எம்பித் துள்ளியது வால்.மதிலில் காட்டுப்புதர்களைகற்பனை செய்திடும் பல்லிதனது இரைக்காக பொட்டலில்பதுங்கலை நிகழ்த்துகிறது.நீண்ட பொறுமைக்குப்பின் பசைநாவு பூச்சியைத் தொடப்போகையில்குட்டிக் கட்டைகளால்மதிலதிர ஆடியிறங்கினேன்.கருப்பு உடம்பும் வெள்ளைத் தலையுங்கொண்ட…
-
இரண்டு நாளாய் இடறிச் சென்ற வானம் பார்த்து ஏமாந்த கடவுளெனும் முதலாளி ஆழக்குழி வெட்டி பெரு விதையாய் அதில் தன்னை நட்டுவித்துக் கொண்டான் ஈரோட்டிலிருந்து கோவை செல்லும் பாசஞ்சர் ட்ரெயினிலிருந்து கட்டம் போட்ட லுங்கியணிந்தவனொருவன் இறங்கி ஊருக்குள் வந்து தன்னை ஊருக்குப்…