அமோகமாக பெருகுகிற வாழ்வு கோபத்தில் சுவரில் கையை முட்டிக் கொண்டவர் ஒரு சிறிய துளையை சுவரில் மறந்து வைத்துவிட்டுப் போகிறார் எப்படியும் அதை மறுநாள் வந்து எடுக்க வருவார் துளை பார்க்க அப்படியே என்னை மாதிரியே இருக்கிறதென அப்பொழுது பூரிப்பார் பாருங்கள் …
கவிதை
-
-
பயிற்சி செவிலி தனது முதலாவது ஊசி செலுத்தும் வைபவத்தை நடுங்கும் கரங்களோடு எதிர்கொள்கிறாள் நோஞ்சான் கிழவியின் சதைப்பற்றற்ற இடது தோள் அச்சமூட்டுகிறது சின்னஞ்சிறு புட்டித்திரவத்தை உறிஞ்சிக்கொள்ள பிரயத்தனப்படுகிறாள் உலர்ந்து தளர்ந்த கரம் எதிர்வினையாற்றக் கிஞ்சித்தும் முயலவில்லை பஞ்சில் டிஞ்சர் நனையத் துடைத்து …
-
திருத்தம் ஒரேயொரு விதிமுறை மட்டும் முதலிலேயே தவறிவிட்டது மூன்றுபேருக்கு மூன்று நாற்காலிகளென துவங்கிவிட்டது விளையாட்டு இப்போது காலி நாற்காலிகளையல்ல அவர்கள் பார்ப்பது முடியும் இசையையல்ல அவர்கள் கேட்பது சுழன்றோடும் அவர்களின் உடலெங்கும் பொருந்திவிட்டது இசையின் ஒளி ஓடுதலின் களிப்பு அமர்தலின் இயல்பு …
-
தீயில் யானை யானை வடிவில் ஒரு விறகுக் கட்டை அச்சு அசல் விறகு யானை நிறம் மட்டும் பழுப்பு சிறிது தீயில் காட்டி எடுக்க நிறம் ஆனது கருப்பு அச்சு அசல் யானை காட்சி அதிசயம் விரலை ஒரு வளையம் போலாக்கி …
-
என் பாடல் மெல்லுதிர் காடு, ஒரு அலகில் சொறியும் சொல், பின் இறக்கையால் பறக்கும் பறவை; இரவு முடிந்து வரும் பாடல் உச்சாடனத்தின் கானலெனப்படுவதென்ன? சப்தங்களின் லாகிரியா? லகுவான புணர்ச்சியின் சோம்பலா? வெயில் பழுத்த கண்களா? ஒரே ஒரு பெண்ணா? மூன்றாவதாக …
-
1 குடைசலிலிருந்து வானத்தின்பற்கள் உதிர்கின்றன.இதற்கு முன்னர்மேலெழுப்பப்பட்டவர்களின்உடற்துண்டுகளைப் போலகுடைசல் மழைகுழிச்சதையாய்ஒரேயடியாய் பொழியும் போதும்வானச்சீப்பிலிருந்து பற்கள் கரையும்.ஒரு குருவித் தலைக்கனத்தில்மேகங்கள் மூடிய எல்லா நாட்களும்சிதைத்துக் கொன்றுமேலெழுப்பபட்டவர்களுக்குதுன்பமாயிருந்தன.ஒட்டுமொத்தமாகஅவர்கள் நேசத்தின்குடைசலில் இருந்தார்கள்.ஒரு மின்னலின் மேல் பகுதியில்அவர்களின் நேசத்தின்பெரும்பகுதியைஒளியேற்றி இருந்தார்கள்.அதற்கு பிறகான மழையில்உடற்பகுதியை அவர்களாககுடைசலில் கரைத்த போதும்ஒளி நிர்மூலமாகவே …
-
மகாநதியில் மிதக்கும் தோணி அடைந்துவிட்டான் அவன்மானுடம் அடைய வேண்டியஅந்தப் பொன்னுலகை!துடுப்பு வலித்து துடுப்பு வலித்துநதி கலக்குவதை நிறுத்திய வேளை,அசைந்துகொண்டிருந்த தோணிஅசையாது நின்ற வேளை,மின்னற்பொழுதே தூரமாய்க்காலமும் இடமும் ஒழிந்த வேளை,அடைந்துவிட்டான் அவன்! மகாநதியில் மிதக்கும் தோணிஉயிர்பிழைக்கும் வேகத்தோடேகரையிலிருந்த மக்கள்பாய்ந்து பாய்ந்து நீந்திக்கை …
-
இன்னொருமுறை சந்திக்க வரும்போது இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒரு துண்டு பூமியைக் கொண்டு வருவேன்.திரும்பும்போதுதுகள்களின் பெருமூச்சை எடுத்துச் செல்வேன். இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகக்கையளவு சமுத்திரத்தை முகந்து வருவேன்.விடைபெறும்போதுஅலைகளின் நடனத்தைக் கொண்டு போவேன் இன்னொருமுறை சந்திக்க வரும்போதுஉனக்காகஒருபிடிக் காற்றைப் பிடித்து வருவேன்படியிறங்கும்போதுஉயிரின் துடிப்புகளைக் கணக்கிட்டு …
-
1 உனது எல்லாப்பிரயாணத்தின் போதும்பிங்களப் பன்றி இடப்பக்கமாககடக்கிற சுப நிகழ்ச்சி நிகழபீடைப்பற்றும்இத்தேசத்திற்குப்வந்து சேர்கிறாய்உனது அதிர்ஷ்டம்குளிர்ந்த குளங்களும்எண்ணற்ற பறவைகளும்உள்ள சிரேட்டத்தைகாணும் பாக்கியம் வாய்க்கிறதுநீ இங்கு தீடீரெனராஜனாகவே மாறுகிறாய்சர்வமும்சித்திக்கிறது உனக்கு அதனால்சகலத்தையும்மாற்றத்தொடங்குகிறாய் நீ தொடங்கியிருக்கும்அவச்சின்னங்களைஇதற்கு முன்புபெருந்துக்கத்திலும்எனது மூதாதையர்நினைவூட்டியதில்லை தற்போது எனது நிலம்மிகுந்த கோடையில்காய்ந்து கிடக்கிறதுகாடைகளும் …
-
சிறு கூடத்துச் சுவரையொட்டி தாளைத் தரையில் வைத்து பிள்ளைகள் வட்டமாய் அமர்ந்திருக்கின்றனர். மையத்திலே குவிக்கப்பட்டன வண்ணக்குச்சிகள். வரைதல் தொடங்கிற்று. ஒரே சமயத்தில் பலர் வட்டம் விட்டோடி வந்து வண்ணங்களைத் தேர்கின்றனர் மையத்திலிருந்து. எங்கிருந்தோ வரும் பறவைகள் ஒரு மரத்தை ஒரே நேரத்தில் …