கச்சகூந்தழி
ச.துரை
ச.துரை

by olaichuvadi

 

யிர் மீப்பெரும் மழைத்துளி
வற்றப்போகும் வீடொன்றில் மூன்று மழைத்துளிகள்
இரவு உணவாடுகின்றன
சாமை வரகு கம்பு மற்றும்
கருநீல குடுவை ததும்ப தழும்ப நஞ்சு.

 

ம்புவோமாக
படுஎளிய புரோட்டாக்களை உண்கிற செல்வந்த உதடுகளே
அதன் சுருக்கங்களும் நிறமும் பெருந்திணை வீட்டு கூரையை ஒத்தது
பொழியும் மின்ராகங்களில்
வாள்களின் பற்கள் மழுங்கி
கடிக்கும் திறனின்று செத்துபோகின
முப்பெரும் கதைகளின் தாய் நிலம்
புயல்காப்பான்
காய்ந்துமடிவாள்
கச்சகூந்தழி
இணையற்ற மீன்கள் துயரில் நீந்தும்
பலமிழந்த பொழுது
கச்சகூந்தழி நீராட வருவாள்
புயல்காப்பான் துணை அளப்பான்
காய்ந்துமடிவாள் புராணமாடுவாள்
பூதகரங்கள் பொல்லாத விதைகளை
தூவுகையிலெல்லாம் இது நிகழும்
பொல்லாத விதைகள் வளர்ந்து
மரமாட தொடங்கும் போது
நான் பற்றியிருப்பது மாதிரியே
நீங்கள் பற்றுகிற கைகளின் புனிதகுளத்திலும்
அயராத வெள்ளமெடுக்கும்
பரிசுத்த காயங்களின் சீழ்குமிழ்கள் புனிதகுளமென கொள்க.

 

தோண்டுதல் மகத்தான செயல்
தானிய குழிகள் மழை தேங்குவதற்கானது
எனது கையில் ஒருபிடி மணலிருக்கிறது
அதை வைத்துதான் என்னை தோண்டப்போகிறேன்
பிறகு ஒருநாள் விடியலில் கத்துவேன்
யுரேகா! யுரேகா!.

 

பிற படைப்புகள்

Leave a Comment