அமோகமாக பெருகுகிற வாழ்வு கோபத்தில் சுவரில் கையை முட்டிக் கொண்டவர் ஒரு சிறிய துளையை சுவரில் மறந்து வைத்துவிட்டுப் போகிறார் எப்படியும் அதை மறுநாள் வந்து எடுக்க வருவார் துளை பார்க்க அப்படியே என்னை மாதிரியே இருக்கிறதென அப்பொழுது பூரிப்பார் பாருங்கள் …
கவிதைகள்
-
-
பயிற்சி செவிலி தனது முதலாவது ஊசி செலுத்தும் வைபவத்தை நடுங்கும் கரங்களோடு எதிர்கொள்கிறாள் நோஞ்சான் கிழவியின் சதைப்பற்றற்ற இடது தோள் அச்சமூட்டுகிறது சின்னஞ்சிறு புட்டித்திரவத்தை உறிஞ்சிக்கொள்ள பிரயத்தனப்படுகிறாள் உலர்ந்து தளர்ந்த கரம் எதிர்வினையாற்றக் கிஞ்சித்தும் முயலவில்லை பஞ்சில் டிஞ்சர் நனையத் துடைத்து …
-
திருத்தம் ஒரேயொரு விதிமுறை மட்டும் முதலிலேயே தவறிவிட்டது மூன்றுபேருக்கு மூன்று நாற்காலிகளென துவங்கிவிட்டது விளையாட்டு இப்போது காலி நாற்காலிகளையல்ல அவர்கள் பார்ப்பது முடியும் இசையையல்ல அவர்கள் கேட்பது சுழன்றோடும் அவர்களின் உடலெங்கும் பொருந்திவிட்டது இசையின் ஒளி ஓடுதலின் களிப்பு அமர்தலின் இயல்பு …
-
தீயில் யானை யானை வடிவில் ஒரு விறகுக் கட்டை அச்சு அசல் விறகு யானை நிறம் மட்டும் பழுப்பு சிறிது தீயில் காட்டி எடுக்க நிறம் ஆனது கருப்பு அச்சு அசல் யானை காட்சி அதிசயம் விரலை ஒரு வளையம் போலாக்கி …
-
என் பாடல் மெல்லுதிர் காடு, ஒரு அலகில் சொறியும் சொல், பின் இறக்கையால் பறக்கும் பறவை; இரவு முடிந்து வரும் பாடல் உச்சாடனத்தின் கானலெனப்படுவதென்ன? சப்தங்களின் லாகிரியா? லகுவான புணர்ச்சியின் சோம்பலா? வெயில் பழுத்த கண்களா? ஒரே ஒரு பெண்ணா? மூன்றாவதாக …
-
நகர உதிரிகளின் பாடல்கள் நாங்கள் முன்பு கால்நடை மேய்ப்பர்களாகவும் மரத்தச்சர்களாகவும் இருந்தோம். பிறகு சில உடல்களுக்கெனச் சிலுவைகளையும் பிரேதங்களுக்கான சரியளவில் சவப்பெட்டிகளையும் செய்பவர்களானோம். நாங்கள் முன்பு தையல்காரர்களாகவும் குடை மற்றும் பூட்டு ரிப்பேர்களைச் சரி செய்பவர்களாகவும் இருந்தோம். பிறகு, கல்லறைக்கற்களின் மீது …
-
பல்லி படுதல் புறப்பட்ட ஞான்றுபல்லி ஒலித்தது.உள்சென்று அமைதியாக அமர்ந்துவிட்டேன்.மூச்செறிந்து மீண்டும்புறப்பட்டேன்.பல்லி ஒலித்தது.உள்நுழைந்துதண்ணீர் பருகியவாறுசுற்றிலும் தேடினேன்.எங்கும் பல்லியைக் காணமுடியவில்லை.சடங்கெல்லாம் புரட்டென்றுசடுதியில் கிளம்பினேன்.செல்லுமிடமெங்கும்வலுத்தது பல்லியின் ஒலி.ஓடினேன்.உடன் ஓடிவந்துகுருமௌனி சொன்னார்:“உன்னைத் துரத்துவது அறம்,பயலே”. விளர்இசை பாறையில் தனித்துக்கிடக்கும்அலை கொணர்ந்த வெண்சங்குயாதின் மதர்த்த யோனியோ?காற்றதன் இணையோ?ஆர்ப்பரிக்கும் அலைகளெல்லாம்அருவக் கலவியின்ஆலிங்கனக் கதறலின் எதிரொலியோ? …
-
சிறு துண்டு இனிப்பு 1 இத்தனை பிரார்த்தனைகளிலும் முழுமையடைந்திடாதஒரு சிறிய அன்பின் கடைசித் தருணத்தைஎல்லோரும் வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அது சட்டென மலர்ந்துசில இதழ்களை நெருக்கமாகக் காண்பிக்கிறது.நமக்கென எதுவுமேயில்லையென்ற காலத்தில்,அப்பெரும் வலியை ஒன்றுமற்றதாகமாற்றிவிடுகிறதது.வாழ்வென்பது,சற்று நீண்டு கிடக்கும் இச்சமவெளியில்ஒரு புல்லைப் போலச்சுதந்திரமாகக் காயத்துவங்குவதுதான்.வாழ்வின் சிறுசிறு …
-
சந்தோஷ நிறம் மரம் நிறைய இலைகள்சந்தோஷ நிறமான பச்சையில்மிளிர்கின்றனஒன்றை மட்டும்தின்ன ஆரம்பித்திருக்கிறதுதுயரின் நிறமான பழுப்புபச்சை என்ற சந்தோஷக் கைகள்கைவிடும்போதுஒரு இலையானதுபள்ளத்தாக்கில் அலறிக்கொண்டேவிழுகிறதுபள்ளத்தாக்குக்குள் பள்ளத்தாக்கெனஅலறலுக்குள் அலறலெனவிரிந்துகொண்டே செல்கிறது. அதிசய மரம் சாக்கடையோரம் கிடந்தவனைதூக்கிச் சென்றுமரத்தடியில் கிடத்துகிறான்தூரத்தில் நின்றுகொண்டுபோவோரிடமும் வருவோரிடமும்சொல்கிறான்அங்கே பாருங்கள்அந்த அதிசய மரம்தனக்குக் …
-
சரிவு நான் சிறுவனாயிருந்த போதுதேவாலய வாயிலில்கால் நடுங்க நின்றுக்கொண்டுவாய் விட்டு கதறினார் ஒரு முதியவர். “ தொடங்குன எடத்துக்கே வந்துட்டேன் ஏசப்பா” பலூன்கள்பொம்மைகள்விளையாட்டு பொருட்கள் எனஎன் கவனம் இருந்தது. இந்நள்ளிரவில்அவரின் முகமும்ஏக்கம், வேதனை, விரக்தி யாவும் கொண்டஅவரது குரலும்நினைவிற்கு வருகிறது. ஏனோ …